புத்தகங்கள்

சித்ரன் ரகுநாத் சிறுகதைகள்

சிறுகதைகள் (கிண்டில் பதிப்பு – Kindle Edition)

இந்த நூலில் சித்ரன் ரகுநாத் எழுதிய முப்பத்தைந்து சிறுகதைகள் அடங்கியுள்ளன. கடந்த இருபத்திமூன்று வருடங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட சிறுகதைகள் இவை. இந்தக் கதைகளைப் படிக்கும்போது எங்கேயாவது ஒரு வரியில், வசனத்தில், சம்பவத்தில் அல்லது ஏதாவது கதாபாத்திரத்தில் நீங்கள் பின்னோக்கிப் போய் அந்த நொடியில் உங்களை அல்லது உங்கள் அனுபவத்தைத் தொட்டுத் தொடர்புபடுத்திப் பார்க்கமுடியும்.


சில்லவுட் புத்தர்

கவிதைகள் (கிண்டில் பதிப்பு – Kindle Edition)

சித்ரன் ரகுநாத் எழுதிய கவிதைகள் அடங்கிய தொகுப்பு


கோடிட்ட இடங்கள்

நாவல் (கிண்டில் பதிப்பு – Kindle Edition)

ஒரு விளம்பர நிறுவனத்தைக் கதைக்களமாகக்கொண்டு நிகழும் இந்நாவலில் தன் காதலைக் கண்டடைய நாயகன் மேற்கொள்ளும் முயற்சிகளும் அதன் மூலம் அவன் தெரிந்து, தெளிந்துகொள்ளும் நிதர்சனங்களும் மையமாக நிற்கின்றன.


தொடர்பு எல்லைக்கு வெளியே

சிறுகதைகள்

இந்தச் சிறுகதைகளின் கருக்கள் பெரும்பாலும் அகண்ட வாழ்வின் சின்னத் துணுக்குகளால் கோர்க்கப்பட்டவை. எதிர்படுகிற ஏதாவது சம்பவங்களில் கிளர்ந்த சிறு பொறிகள் சிறுகதைகளாய் வடிவம் பெற்றிருக்கின்றன.


மனதில் உனது ஆதிக்கம்

சிறுகதைகள்

கல்கி, ஆனந்தவிகடன் போன்ற தமிழின் முன்னணிப் பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு இது.


ஜவ்வரிசி வடாம்,
உள் பனியன் மற்றும்
ஒரு ரேடியோ விளம்பரம்

தேர்ந்தெடுத்த வலைப்பதிவுகள்

எனது வலைப்பதிவுத் தளத்திலிருந்து எடுத்துக் கோர்க்கப்பட்ட பதிவுகள் இவை.


தருணம்

குறுநாவல்

கல்கி வார இதழில் நான்கு வாரங்கள் வெளியான தொடர்.


சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட்

குறுநூல்

2008-ல் எனக்கு வாய்த்த சிங்கப்பூர் பயணத்தின்போது பார்த்த விஷயங்களை சிறு சிறுடயரிக் குறிப்புகள் போல் எழுதி வைத்தது பின்னாளில் குறுநூலாகியது. சிங்கப்பூர் என்னும் அழகிய நாட்டுக்கு முதல் முறை செல்ல நினைப்பவர்களுக்கு ஒரு சின்ன அறிமுகமாக மட்டுமே இந்த நூல் இருக்கும்.