மரத்தடி.காம் குளிர்கால புதுக்கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை நள்ளிரவில் திடுக்கிட்டுக் கனவோடு கரணம் தப்பிய உறக்கத்தை மறுபடி கண்களுக்குள் சொருக எடுத்துக்கொண்ட பயிற்சிகள் தோல்வியுற்றிருந்தன. ஆக உணர்வுநிலையில் மல்லாந்தபடி முதல் பறவையின் குரலுக்காய் வெகுநேரம் விழித்திருக்கவேண்டியிருந்தது. மெல்ல ஒரு காகம் கரைந்தது. தொடர்ந்து பல. நட்சத்திர வைரங்களின் எண்ணிக்கையை சரிபார்த்துவிட்டு இருள் மையை ஒரு ஆரஞ்சுக் கைக்குட்டையால் ஆகாயம் துடைக்க ஆரம்பிக்கும்போது எழுந்துகொண்டேன். இனி தாமதிக்கலாகாது. பிறந்ததிலிருந்து எரிந்து தீர்த்த உயிர்ப்பொருளின் மிச்சத்தில் ஓட … Continue reading
Tagged with சித்ரன் கவிதைகள் …
முன்பதிவு
மரத்தடி.காம் மெளனம் கலைந்து நகர்ந்த ரயில். சூரியனை உள்வாங்கிச் சிலிர்த்த தண்டவாள வெயில். தற்காலிக இடம்பெயர்தலாய் இன்னொரு பயணம். இன்னொரு சேருமிடம். டிபன் பாக்ஸில் பசியாறும் குடும்பம். பிஸ்லெரியில் தாக சாந்தி. கைமாறும் ஓசிப் பேப்பர். ஆரஞ்சுப் பழங்களின் பரிமாற்றம் வரை வந்த.. நீங்க எந்த ஊர் என்று தொடங்கின ஸ்நேகம். தோளில் ·ரைபிளுடன் ஊடுருவிக் கடந்த காவல். பொதுஅறிவுப் புத்தக விற்பனை. குழந்தைகளுக்கான பீப்பி. சீதாப்பழம். குழிந்த கன்னங்கள் வாழ்வின் கடைசி இழுப்புபோல் முதியவர் ஆழமாய் … Continue reading
ஆண்களுக்கு மட்டும்
மரத்தடி.காம் பிரபஞ்ச வெளியிலிருந்து நழுவி விழுந்தான் அவன் ஆழ்ந்த உறக்கத்தினூடே முதன் முறையாய் ஈர்ப்பு விசை நோக்கிய அதிவேக இழுப்பில் எல்லையற்றுச் சுழன்று திரும்பி இறுதியில் வெண் மேகங்களின் மேல் விழுந்தான் இதமாய் ஈரமாய் பேரின்பப் பெருவீழ்ச்சி மறுநாள் கலவரங்களாய் விரிந்திருந்த உலக வரைபடங்களைக் குனிந்து பார்த்துக்கொண்டான் உடன் நிரம்பியதொரு பதற்றம் மனதின் அறைகளில் யாரும் முன்னறிவிக்கவில்லை இப்படியொரு நிகழ்வை இதுபோல் இன்னொருவனுக்கும் நேர்ந்ததா என பயக் கேள்விகளுடன் சலவை செய்துகொண்டான் உலக வரைபடங்களை மனத்தாழ்வும் கலவரமும் … Continue reading