மரத்தடி.காம்
பிரபஞ்ச வெளியிலிருந்து
நழுவி விழுந்தான் அவன்
ஆழ்ந்த உறக்கத்தினூடே
முதன் முறையாய்
ஈர்ப்பு விசை நோக்கிய
அதிவேக இழுப்பில்
எல்லையற்றுச் சுழன்று திரும்பி
இறுதியில்
வெண் மேகங்களின் மேல்
விழுந்தான்
இதமாய் ஈரமாய்
பேரின்பப் பெருவீழ்ச்சி
மறுநாள்
கலவரங்களாய் விரிந்திருந்த
உலக வரைபடங்களைக்
குனிந்து பார்த்துக்கொண்டான்
உடன் நிரம்பியதொரு பதற்றம்
மனதின் அறைகளில்
யாரும் முன்னறிவிக்கவில்லை
இப்படியொரு நிகழ்வை
இதுபோல் இன்னொருவனுக்கும்
நேர்ந்ததா என
பயக் கேள்விகளுடன்
சலவை செய்துகொண்டான்
உலக வரைபடங்களை
மனத்தாழ்வும் கலவரமும்
உறக்கத்தை வாட்டினாலும்
பின்தொடர்ந்த நாட்களில்
இன்பமென்று தெளிந்தது.
பிறகு அவனாகவே
ஈர்ப்பு விசைநோக்கி
விழுவதும்
பின் வெண்மேகங்களிலிருந்து
எழுவதும்.